ஒரு ரூபாயில் வருவாயில் அரசின் செலவு இவ்வளவு இருக்கின்றதா! அப்போ அரசுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா? 

Photo of author

By Sakthi

ஒரு ரூபாயில் வருவாயில் அரசின் செலவு இவ்வளவு இருக்கின்றதா! அப்போ அரசுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா?
அரசு செலவு செய்யும் ஒரு ரூபாயில் எத்தனை செலவுகள் இருக்கின்றது என்பது பற்றியும் அரசு ஈட்டும் ஒரு ரூபாய் எங்கிருந்து எல்லாம் கிடைக்கின்றது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நேற்று(ஜூலை23) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேலை வாய்ப்பு, கல்விக் கடன், சிறுகுறு தொழில் கடன், ஏழைகளுக்கு வீடு, பெண்களுக்கு முன்னேற்றம், வரி விதிப்பு மற்றும் குறைப்பு போன்ற பல வகையான அறிவிப்புகள் வெளியானது.
இதில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மட்டும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகம் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே போல இரயில்வே துறைக்கும் எந்தவித ஒதுக்கீடும் செய்யப்படாததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று(ஜூலை23) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஆனால் மத்திய பட்ஜெட் தாக்கல் ஆனதால் தங்கம் விலை சவரனுக்கு 2200 ரூபாய் ஒரே நாளில் குறைந்ததால் தங்கம் வாங்கும் மக்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து ஒரு ரூபாயில் அரசுக்கு இருக்கும் செலவினங்கள் குறித்து பார்க்கலாம்.
மத்திய அரசு ஈட்டும் ஒரு ரூபாய் வருவாயில் ஓய்வூதியம் அளிக்க 4 பைசா செலவு செய்யப்படுகின்றது. மாநில வரி பங்கீட்டுக்காக 21 பைசா செலவு செய்யப்படுகின்றது. நிதிக்குழு தொடர்பான செலவுகளுக்கு 9 பைசா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. மத்திய துறை திட்டங்கள் தொடர்பாக 16 பைசா செலவு செய்யப்படுகின்றது. பாதுகாப்புத்துறைக்காக 8 பைசா செலவு செய்யப்படுகின்றது.
மானியங்களுக்கு 6 பைசாவும், மத்திய அரசின் ஆதரவு திட்டங்களுக்கு 8 பைசாவும் வட்டிக்கு 19 பைசாவும் செலவு செய்யப்படுகின்றது. அதே போல மற்ற செலவினங்களுக்கு 9 பேசு செலவு செய்யப்படுகின்றது. அடுத்து அரசு ஈட்டும் ஒரு ரூபாய் வருவாய் எதன். மூலம் கிடைக்கின்றது என்பது குறித்து பார்க்கலாம்.
மத்திய அரசு பெரும்பாலும் ஈட்டும் வருவாய் வரிகள் மூலம் கிடைக்கின்றது. அந்த வகையில் அரசு ஈட்டும் ஒரு ரூபாய் வருமானத்தில் வருமான வரியில் இருந்து 19 பைசா அடங்கியுள்ளது. கலால் வரியில் இருந்து 5 பைசா அடங்கியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக 18 பைசா கிடைக்கின்றது. நிறுவன வரி மூலமாக 17 பைசா கிடைக்கின்றது.
சுங்க வரி மூலமாக 4 பைசா கிடைக்கின்றது. கடன் இல்லாத மூலதன ரசீது முலமாக 1 பைசாவும், வரி அல்லாமல் வருவாய் ரசீது மூலமாக 9 பைசாவும் கிடைக்கின்றது. மேலும் கடன் உள்ளிட்ட வருவாய்கள் மூலமாக 27 பைசா கிடைக்கின்றது.