தலைமுடி செம்பட்டையாக இருக்கின்றதா? கருப்பாக மாற்ற இதோ எளிமையான வழி! 

0
118
Is the hair red? Here's an easy way to turn it black!
Is the hair red? Here's an easy way to turn it black!
தலைமுடி செம்பட்டையாக இருக்கின்றதா? கருப்பாக மாற்ற இதோ எளிமையான வழி!
வெள்ளையாக இருக்கும் தலைமுடியை வேகமாக மாற்றுவதற்கு பலரும் ஹேர் டை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஹேர் டை சில நாட்களுக்கு வெள்ளையாக வைத்திருக்கும் முடியை கருப்பாக வைத்திருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல கருப்பாக இருக்கும் தலைமுடி செம்பட்டை நிறமாக மாறத் தொடங்கும்.
செம்பட்டையாக மாறிய தலைமுடியை மீண்டும் கருப்பாக மாற்ற மறுபடியும் ஹேர் டை பயன்படுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு நாம் மாற்றி மாற்றி ஹேர் டை பயன்படுத்தும் பொழுது நம்முடைய தலைமுடி பலவீனம் அடைகின்றது. இதனால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும். இந்நிலையில் செம்பட்டையாக இருக்கும் தலைமுடியை இயற்கையாக கருப்பாக மாற்ற எளிமையான வழிமுறை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* அதிமதுரம்
* பால்
செய்முறை…
முதலில் அதுமதுரத்தை எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊறிய அதிமதுரத்தை எடுத்து மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த விழுதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் செம்பட்டையாக இருக்கும் முடி கருப்பாக மாறத் தொடங்கும்.