ஓஹோ அறிவாலயம் தான் உங்க கோவிலா? அப்படின்னா இந்தாங்க ஆர் எஸ் பாரதியின் மானத்தை வாங்கிய பாஜகவினர்!

Photo of author

By Sakthi

ஓஹோ அறிவாலயம் தான் உங்க கோவிலா? அப்படின்னா இந்தாங்க ஆர் எஸ் பாரதியின் மானத்தை வாங்கிய பாஜகவினர்!

Sakthi

நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உரையாற்றியபோது, ஐபிஎஸ் படித்த ஆளுநர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மெண்டல் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக, அண்ணாமலை கோபாலபுரம், அறிவாலயத்தில் பிச்சை எடுப்பவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு ஆர் எஸ் பாரதி அறிவாலயம் தான் என்னுடைய கோவில் என்று பதில் கருத்து கூறியுள்ளார்.

அவருடைய இந்த கருத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவை சார்ந்தவர்கள் அறிவாலயம் கோவில் என்றால் வெளியில் அமர்ந்து பிச்சை எடுப்பதற்காக அலுமினிய தட்டு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர ஊடக பிரிவு செயலாளர் காமேஷ், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், செயலாளர் வாசன் போன்றோர் பங்கேற்றுக்கொண்டனர். சென்னை நங்கநல்லூரில் இருக்கின்ற ஆர் எஸ் பாரதியின் வீட்டு முகவரிக்கு ரிஜிஸ்டர் போஸ்டில் தனித்தனியே 5 அலுமினிய தட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.