கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைகடன் தள்ளுபடியா? விவரங்களை சேகரிக்க உத்தரவு!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தேர்தல் களத்தில் தரப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஆட்சி ஏற்ற பின்பு பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம், குடும்ப அட்டைக்கு 4000, பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, விவசாயிகளுக்கு கடன் ரத்து போன்ற பல அத்தியாவசிய அறிவிப்புகளை கூறி இருந்தார்.
அதன்படி அவர் ஒவ்வொன்றாக செய்துவருவதும் மக்களை மகிழ்ச்சியுற செய்துள்ளது. பேருந்து கட்டணம் இல்லை என்ற அறிவிப்பினால் பல பெண்கள் பயனுற்று உள்ளனர். அதே போல குடும்ப அட்டைக்கு தந்த பணமும் இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு பெரும் உதவிகரமாக இருந்தது.
மேலும் இன்று வெளியிடப்பட்ட பட்ஜெட்டின் மூலம் அனைவருக்கும் பெரும் தலைவலியாக மாறிய பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானக் கடன் தள்ளுபடி இருக்கும். இல்லை என பல்வேறு விவாதங்களும், பல்வேறு புரளிகளும் பரவிக்கொண்டு இருப்பதும் கவனத்தில் கொள்ள கூடியது.
தற்போது அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூட்டுறவு வங்கிகளில் உள்ள கணக்குகளில் 5 சவரனுக்கு கடன் வைத்து உள்ளவர்களின் விவரங்களை கூட்டுறவுத்துறை கோரியுள்ளது. மேலும் பயனாளிகளின் அடிப்படை தகவல்கள் எனப்படும் கேஓய்சி மற்றும் குடும்ப அட்டை விவரங்களையும் தயாராக வைத்திருக்கவும் கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயனாளிகளின் விவரங்களை வருகிற 16-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்துக்கு தரவும் கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்களின் ஆவணங்கள் குடும்ப அட்டை விவரங்களை கூட்டுறவுச் சங்கங்கள் தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் அரசு உத்தரவிட்டுள்ளது.