கொரோனா தடுப்பு பணிக்காக அ.தி.மு.க சார்பில் இவ்வளவு நிதியுதவியா?

Photo of author

By Hasini

கொரோனா தடுப்பு பணிக்காக அ.தி.மு.க சார்பில் இவ்வளவு நிதியுதவியா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவி வரும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இதன் காரணமாக நாம் நாட்டில் பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதியுறுகின்றனர்.

இதன் காரணமாக நம் நாட்டில் மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொருளாதரத்தை மீட்டு எடுக்கவும், இந்த பேரிடர் சூழ்நிலையை சமாளிக்கவும் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து பலரும் தங்களால் முயன்ற உதவியை செய்து வருகின்றனர்.இந்நிலையில் முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு அ.தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் வழங்குவதாகவும், கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும்.

மேலும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் கொரோனா நிவாரண பணிகளுக்கென முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.