இந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா?

Photo of author

By Hasini

இந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா?

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி. இவருக்கு 34 வயதாகிறது. ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். இவர் தனது 13 வயதிலிருந்து அதில் இணைந்து விளையாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

முதலில் ஜூனியர் அணிக்காகவும், அதன் பின் 17 வயதிலிருந்து ஸ்பெயின் லீக் போட்டிகளிலும் அடி எடுத்து வைத்தார். அடுத்த சில ஆண்டுகளில் உலகின் தலை சிறந்த கால்பந்து வீரராக உருமாறினார்.பார்சிலோனா அணிக்காக லா லிகா, சாம்பியன்ஸ் லீக், கிளப் உலக கோப்பை உள்பட 35 பட்டங்களை குவித்ததில் முக்கிய பங்காற்றி உள்ளார். தனது கடைசி காலம் வரை பார்சிலோனா குடும்பத்திலேயே இணைந்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரை பார்சிலோனா கிளப் வெளியேற்றியது.

இதனால் 21 ஆண்டுகாலம் அந்த குழுவுடனான, அவரது அந்த பந்தம் முடிவுக்கு வந்தது. ஏனெனில் கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்கும் பார்சிலோனா கிளப் வீரர்களின் ஊதியத்தின் உச்சவரம்பில் புதிய மாற்றங்களை கொண்டு வந்ததன் காரணமாக, அடுத்த 5 ஆண்டு கால ஒப்பந்தம் தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதன் காரணமாக மெஸ்சி தனது 50 சதவிகித ஊதியத்தில் விளையாட முன்வந்த போதிலும் அந்தப் பேச்சுவார்த்தை பலன் தருவதாக இல்லை. பார்சிலோனா கிளப்பில் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி வரை அந்த அணிக்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் அளித்து இருக்கிறேன். இப்படி நான் பாதியில் பிரிவேன் என கற்பனை செய்துகூட பார்த்ததில்லை என்றும்,  பார்சிலோனாவுக்கு குட்பை சொல்வேன் என்றும் நினைக்க வில்லை. உண்மையிலேயே இந்த அணியை விட்டு பிரிவதற்கு கடினமாக இருக்கிறது என்றும் கூறிய, மெஸ்ஸி தேம்பித் தேம்பி அழுதார்.

இந்த நிலையில் அங்கிருந்து விடைபெற்று அடுத்து இரண்டு நாட்களில் புதிய கிளப்பில் இணைந்துள்ளார். பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் என்ற கால்பந்து அணிக்காக விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதை அவரது தந்தை ஜார்ஜ் நேற்று உறுதிப்படுத்தினார். புதிய ஒப்பந்தப்படி அவருக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.305 கோடி ரூபாய் ஊதியமாக கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதில் தான் பிரேசிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மார்,  பிரான்சின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே இயங்கி வருகிறார்கள். இந்த மூவர் கூட்டணி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பை கனவை நனவாக்கும் என்பது அந்த க்ளப்பின் அசைக்க முடியாத நம்பிக்கையாக தற்போது இருக்கிறது.