இந்த கண்ணாடிக்கு இவ்வளவு மதிப்பா? 17 ம் நூற்றாண்டை சேர்ந்த பொருள்!
வைரம் மற்றும் மரகத லென்ஸ்கள் பொருத்தப்பட்ட இரண்டு ஜோடி முகலாயர்கள் காலக் கண்ணாடிகள் லண்டனில் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபியின் மூலம் ஏலம் விடப்பட இருக்கின்றது. இதன் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் ஒவ்வொரு கண்ணாடியும் சுமார் 27 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதில் கேட் ஆப் பாரடைஸ் என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு ஜோடி மட்டும் கண்ணாடி வைரத்தால் ஆன பிரேம்களோடு மரகதத்தால் ஆன லென்ஸ்கள் மூலம் பொருத்தப்பட்டுள்ளன. ஹலோ ஆப் லைட் என்று அழைக்கப்படும் இரண்டாவது ஜோடி கண்ணாடி, வைரத்தால் ஆன பிரேம்களில் வைர லென்ஸ்களை பொருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த லென்ஸ்கள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், பிரேம்கள் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த கண்ணாடிகள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இளவரசருக்காக உருவாக்கப்பட்டதாகவும், இதில் பயன்படுத்தி இருக்கும் மரகதங்கள் கொலம்பியாவிலிருந்து, போர்ச்சுகீசிய வணிகக் கப்பல்கள் மூலம் வந்தவை என்றும், இந்த வைரங்கள் கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து வந்தவை என்றும் கூறப்படுகின்றன.
பழைய பொருள் என்றாலே அதன் மதிப்பு தனி தான் என்பதை இது போல் அறிய வகை பொருட்கள் நமக்கு நினைவு படுத்திக் கொண்டே உள்ளது. அதிலும் ஒரு இளவரசருக்கு பயன்பட வேண்டி செய்த பொருள் என்றால் சொல்ல வேண்டுமா? என்ன? மிகவும் ரசனையோடு பார்த்து பார்த்து உருவாக்கி இருப்பார்கள். அதனால் தான் நாம் பழைய புராதான கதைகளில் வரும் படி வைரங்களும், மரகதமும் வைத்து செய்துள்ளனர்.