கொரோனா தோன்றியது இப்படிதானா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து நாட்டு மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி, உலக நாடுகள் அனைத்தையும் தடுமாற்றத்திற்கு, மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பம் முதலே கொரோனா தோற்றை சீனாதான் உருவாக்கியது என அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தீர்க்கமாக சொன்னாலும், சீனா அதை முற்றிலும் மறுத்து வருகிறது. ஆனால் அமெரிக்கா இந்த கருத்தில் உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதை அப்பப்போது ஆய்வுகளின் மீது அமெரிக்கா நிரூபிக்கவும் பல்வேறு ஆய்வுகளை செய்து கொண்டே உள்ளதும் குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையில் கொரோனா தோன்றியது எப்படி என்பது இன்னமும் உறுதிப்படுத்தப் படவில்லை. மேலும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணைக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்க உளவுத்துறை அதனை விசாரித்து ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த அமெரிக்க உளவுத் துறை அறிக்கையில் ரகசியம் காக்க தேவையில்லாத அறிக்கை விவரங்களை வெள்ளை மாளிகை விரைவில் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் பிசாகி கூறுகையில், முதலில் ஜனாதிபதியிடம் அறிக்கையின் விபரங்கள் எடுத்துரைக்கப்படும். அதனால் அறிக்கை குறித்த விவரங்கள் எப்போது வெளியிடுவோம் என, சரியான தேதியைக் கூற முடியவில்லை. எனவே இரண்டு நாட்களில் இருந்து சில நாட்களுக்குள் அவை வெளியிடப்படும் என்றும் கூறினார்.