நாயுருவி செடி என்பது சித்த மருத்துவத்தில் அதீத பலன்களை தரக்கூடிய செடிகளாக கருதப்படுகிறது. அதேபோன்று ஆன்மீகத்திலும் இதனுடைய பங்கு அதிகரித்து காணப்படுகிறது. அதாவது நாயுருவி செடி என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. செல்வத்தை ஈர்க்கக்கூடிய சக்தி என்பது இந்த செடிக்கு அதிகமாக இருக்கிறது.
சாலையோரங்களிலும், தெருகளிலும் அதிகமாக இந்த செடி காணப்படும். மிக எளிமையாக கிடைக்கக்கூடிய செடியும் இந்த செடிதான். இந்த நாயுருவி செடி என்பது காரத்தன்மை, கசப்பு தன்மை மற்றும் துவர்ப்பு தன்மை என மூன்று விதமான சுவைகளைக் கொண்டது.
இந்த செடியின் இலை, விதை மற்றும் வேர் ஆகிய அனைத்தும் அதீத மருத்துவ குணங்களைக் கொண்டது.
இந்த இலைகளை கொண்டு பல்வேறு விதமான நோய்களுக்கான ஆகச் சிறந்த மருந்துகளை தயாரிக்கலாம்.
அதேபோன்று இந்த நாயுருவி செடிக்கும், செல்வத்துக்கும் மிகப்பெரிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மகாலட்சுமியின் அம்சமாக திகழக்கூடிய இந்த செடியின் வேரினை எடுத்து, நமது வீட்டில் மற்றும் தொழில் செய்யக்கூடிய இடங்களில் பணம் வைக்கக் கூடிய இடங்களில் வைத்துக் கொண்டால், பணம் பெருகும் என்று கூறப்படுகிறது.
இந்தச் செடியின் வேரினை எடுக்கும் பொழுது கற்கள் அல்லது நமது கைகளைக் கொண்டுதான் எடுக்க வேண்டும். இந்த வேரினை எடுத்த பிறகு அதனை பசுமாட்டின் கோமியத்தால் நன்கு கழுவி விட வேண்டும்.
அதன் பிறகு இந்த வேரினை ஒரு மஞ்சள் நிற துணி அல்லது வெள்ளை நிற துணியில் குங்குமம், குண்டு மஞ்சள் மற்றும் நாயுருவிச் செடியின் வேர் ஆகிய மூன்றையும் வைத்து நன்றாக கட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கட்டி வைத்ததை நமது வீட்டில் பணம் வைக்கக்கூடிய இடத்தில் நமது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு வைக்க வேண்டும். வைக்கும் பொழுது ‘எனது வீட்டில் இருக்கக்கூடிய பணமானது மென்மேலும் வளர வேண்டும். நிலையான செல்வம் வேண்டும். இந்த செல்வத்தின் மூலம் அழியாத சொத்தை நான் வாங்க வேண்டும்’ என்று மனதார தெய்வத்தை வேண்டிக்கொண்டு பணம் இருக்கக்கூடிய இடத்தில் இந்த வேரினை வைக்க வேண்டும்.
இந்தச் செடியின் இலைகளை அரைத்து நமது உடலில் எங்கேனும் ஆறாத புண்கள் இருந்தால் அதன் மீது வைக்கலாம். சர்க்கரை நோயாளிகள் உடம்பில் ஏற்படக்கூடிய புண்கள் மீதும் இந்த இலைகளை அரைத்து வைக்கலாம். இந்த இலைகளை அரைத்து வைப்பதன் மூலம் காயங்கள் விரைவில் குணமாகிவிடும்.
இந்த நாயுருவி செடியானது நரம்புகளை வலுவாக்கும், சிறுநீரை பெருக்கும், காய்ச்சலை குணப்படுத்தும், முக வசீகரத்தை ஏற்படுத்தும், சீதபேதியை குணமாக்கும், வியர்வையை தடுக்கும் இது போன்ற பல்வேறு மருத்துவ குணங்களுக்கு இந்த செடிகள் பெரிதும் பயன்பட்டு வருகிறது.