
ADMK CONGRESS: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில், கட்சிகளனைத்தும் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளும் அதன் செயல்பாட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு இந்த தேர்தலில் அதனை எதிர்க்கட்சியாக கூட வர விடாது என்ற கருத்து நிலவுகிறது.
அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா போன்றோர் நால்வர் அணியாக உருவெடுத்துள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர்கள் எந்த அணியில் இணைவார்கள் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வர, அதற்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில், ஓபிஎஸ் திமுக பக்கம் சாய்வதாகவும் தகவல் வந்தது.
ஆனால், போடி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ்யை இந்த முறை திமுக வீழ்த்தும் என்று ஸ்டாலின் கூறியதற்கு பதிலடியாக ஓபிஎஸ் அவரது கருத்தை கூறியிருந்தார். போடி தொகுதியில் வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ் இந்த முறை திருவாடானை தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. திருவாடானை தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றது. தற்போது அதனை பறிக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஓபிஎஸ்யின் இந்த வியூகம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
