இவர்தான் பட்டத்து இளவரசரா? யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்!

Photo of author

By Hasini

இவர்தான் பட்டத்து இளவரசரா? யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்!

துபாயின் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அவர் அங்குள்ள துபாய் ஆட்சியாளர் சொந்தமான பண்ணை இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அவர் கோடால்பின் குதிரை லாயத்தில் உள்ள குதிரைகளை பார்வை இடும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதில் குளிருக்கு அணியும் ஜாக்கெட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அதிலும் முக்கியமாக கடந்த மே மாதம் பிறந்த அவரது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு அவர் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் மிகவும் வைரலாக பதியப்படுகிறது. முக்கியமாக அதிலும் கோல்டால்பின் குதிரை லாயத்தில் அயர்லாந்து நாட்டில் பிறந்த அடையார் குதிரையுடன் சேர்ந்து அவர் நிற்பது போல அந்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரது கையில் மகனுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து அவர் ஒரு செய்தியையும் பதிவிட்டுள்ளார். அந்த செய்யின் மூலம் பயிற்சியும் கல்வியும் விரைவில் தொடங்க வேண்டும் என்றும், மேலும் ராஷித்தும், ஷேக்காவும் அவரது இரட்டை குழந்தைகளின் பெயர்களை கூறி  அடயாரை (குதிரையை) பார்க்கவும், வாழ்த்து தெரிவிக்கவும் வந்துள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் அடயார் என்ற குதிரை ரேஸ் கோர்ஸில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் நடப்பு ஆண்டில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் பல்வேறு குதிரைகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.