ADMK BJP: பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலில் தனது கவனத்தை திருப்பியுள்ளது. அதற்காக பிரிந்த அதிமுகவை ஒன்று சேர்ப்பது, விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது, கொங்கு மண்டல தொகுதிகளை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு பெறுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக தேர்தலுக்காக கூட்டணியை பலமாக வைத்திருந்த பாஜகவிற்கு அதிமுகவின் வருகையால் அது காணாமல் போய் விட்டது.
பாஜகவில் தங்களுக்கு உரிய மரியாதையை அளிக்கப்படவில்லை என்று கூறிய ஓபிஎஸ் முதலில் கட்சியிலிருந்து விலக, அவருக்கு பின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்யை ஏற்க முடியாது, அவரை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் கட்சியில் இணைவோம் என்று கூறி பாஜகவிலிருந்து விலகினார் டிடிவி தினகரன். இவ்வாறு அதிமுகவில் பிரிவினைகள் தொடர இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்த அமித்ஷா அதிமுகவை சேர்ந்த பலரையும் டெல்லி அழைத்து பேசினார்.
இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு அமித்ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி சென்ற ஓபிஎஸ் தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றியும், அதிமுக ஒருங்கிணைப்பது பற்றியும் பேசியதாக கூறினார். ஆனால் இவர் கூறிய பதில் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்குவதை அமித்ஷாவிடம் கூறி விட்டார், மீண்டும் அதிமுக இணைய போகிறார் என்ற பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, ஓபிஎஸ் எங்கு சென்றாலும் இறுதியில் பாஜகவில் தான் சேருவார். பாஜகவில் இணைந்தால் ஓபிஎஸ்-க்கு சீட் கொடுப்பதாக பேச்சு உள்ளது என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். ஓபிஎஸ் பாஜக உடன் நெருக்கமாக உள்ளதால் இவரின் இந்த கருத்து உண்மை தான் என பலரும் கூறுகின்றனர்

