TVK: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே தவெக பற்றிய செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அவருக்கான ஆதரவு அதிகளவில் இருந்தது. கரூர் சம்பவத்திற்கு பிறகும் இந்த நிலை மாறவில்லை. விஜக்கான ஆதரவு ஒரு பக்கம் கூட, தமிழகத்திலுள்ள கட்சிகளும், தேசிய கட்சிகளும், அவருடன் கூட்டணி அமைக்க போராடி வருகின்றனர். அதிமுகவும், பாஜகவும், விஜய்யின் குரலாகவே செயல்படுவதை பார்க்க முடிகிறது.காங்கிரஸும் மறைமுகமாக உதவி வருகிறது.
இரண்டு தரப்பிலிருந்தும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வர, பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் தவெகவின் எதிர்காலம் பாதிக்கப்படும், அதனால் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம் என்று தவெகவின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி விஜய்யிடம் கூறியதாக தகவல் வந்துள்ளது. காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பதன் மூலம் திமுக வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்றும், நம் தலைமையில் கூட்டணி அமையுமென்றும், தமிழகத்தில் முக்கிய கட்சியாக வலம் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் விஜய்யிடம் கூறியுள்ளாராம்.
புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதிலிருந்தே கட்சியின் பணிகளை ஜான் ஆரோக்கிய சாமி மேற்கொள்வதால் இவரின் இந்த நிபந்தனையை விஜய் ஏற்றுக்கொள்வார் என்று தவெகவின் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஜனவரியில் தான் தனது கூட்டணி முடிவை அறிவிப்பேன் என்று விஜய் உறுதியனாக உள்ளதால் நல்ல முடிவை தெரிவிப்பார் என்று தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

