புராஜெக்ட் K திரைப்படத்தின் தலைப்பு இதுதானா!! இந்த படத்தில் இவரும் இருக்காரா!!

0
112

புராஜெக்ட் K திரைப்படத்தின் தலைப்பு இதுதானா!! இந்த படத்தில் இவரும் இருக்காரா!!

 

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் PROJECT K திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானதை அடுத்து புராஜெக்ட் கே திரைப்படத்தின் உண்மையான தலைப்பு தெரியவந்துள்ளது. மேலும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது.

 

நடிகர் பிரபாஸ் நடிக்கும் புராஜெக்ட் கே திரைப்படத்தை இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். நடிகர் பிரபாஸ் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன், திஷா பட்டாணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தின் மூலமாக மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் புராஜெக்ட் கே திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகின்றது.

 

புராஜெக்ட் கே திரைப்படத்தின்.உண்மையான தலைப்பு என்ன.என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். அந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் புராஜெக்ட் கே படக்குழுவினர் பூர்த்தி செய்துள்ளனர்.

 

புராஜெக்ட் கே படக்குழுவினர் அமேரிக்காவில் இருக்கும் சான் டியாகோ நகருக்கு சென்றனர். அங்கு பெரும் பொருட்செலவில் “புராஜெக்ட் கே என்றால் என்ன?” என்ற தலைப்பின் கீழ் புரொமோசன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் புராஜெக்ட் கே படக்குழுவினர் இந்த நிகழ்ச்சிக்காக காமிக் புத்தகம், புராஜெக்ட் கே தலைப்பு அச்சிடப்பட்ட டீ சர்ட்டுகள் போன்றவற்றை வழங்கி வந்தனர்.

 

இதையடுத்து இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு புராஜெக்ட் கே திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை அமேரிக்காவில் இருந்து வெளியிட்டது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் புராஜெக்ட் கே திரைப்படத்தின் உண்மையான தலைப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்றையும் படக்குழு அளித்துள்ளது.

 

இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர் பசுபதி அவர்களும் இடம்பெற்றுள்ளார். அதன்படி நடிகர் பசுபதி அவர்களும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. நடிகர் பசுபதி அவர்கள் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் “ரங்கன் வாத்தியார்” என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

 

மேலும் புராஜெக்ட் கே என்பதன் அர்த்தம் கல்கி என்று முன்னரே யூகிக்கப்பட்டது. அந்த வகையில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தலைப்பை வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு கல்கி 2898 ஏடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் அவர்கள் நினைத்தபடியே விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமாக நடித்துள்ளார். இந்த கல்கி 2898ஏடி திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிக் கொண்டிருக்கின்றது.

 

Previous articleபசுமையாக மாறும் ஈசிஆர் சாலை!! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அசத்தல் அறிவிப்பு!!
Next articleஇனி 8 மணிநேரம் தான்!! ரயில் பயணிகளுக்கு வெளியான அட்டகாசமான அப்டேட்!!