கூட்டுறவு வங்கிகளில் இப்படியா நடக்கும்? அதிரடி காட்டிய தமிழக அரசு!

Photo of author

By Hasini

கூட்டுறவு வங்கிகளில் இப்படியா நடக்கும்? அதிரடி காட்டிய தமிழக அரசு!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதே போல் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மேலும் அவர் சொன்ன பல  வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரு நபரே பல சங்கங்களில் லட்சக் கணக்கில் நகை கடன் பெற்றுள்ளார். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றதும், போலி நகைகளை அடமானம் வைத்ததும், வறியோரிலும் வறியோர்க்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்துகிறது, நகைகளை வாங்காமலேயே நகைகள் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றுவது, கடன் கொடுப்பது உள்ளிட்ட பல வழிகளில் முறைகேடுகள் நடந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மல்ல சமுத்திரம் கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை வைத்து ரூபாய் 1133500 கடன் வாங்கி உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு விதிகளை மீறி பெறப்பட்ட நகை கடன் தொகையை வசூலிக்க தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் ஐந்து சவரனுக்கு அதிகமாக விதிகளை மீறி நகை கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை சேகரிக்கவும் குறிப்பிட்டுள்ளார். முறைகேடுகளில் ஈடுபட்ட அவர்களிடம் இருந்து நகை கடனை வசூலிக்கவும், தவணைத் தொகையை கட்ட தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.