நன்றாக ஓடிக் கொண்டிருந்த உங்கள் சீலிங் ஃபேன், கரெக்டா வெயில் காலத்தின் போது குறைவான காற்றை தருகிறதா..??

Photo of author

By Janani

நன்றாக ஓடிக் கொண்டிருந்த உங்கள் சீலிங் ஃபேன், கரெக்டா வெயில் காலத்தின் போது குறைவான காற்றை தருகிறதா..??

Janani

என்னதான் ஏசி, ஏர் கூலர் என பல விதமான பொருட்கள் வந்தாலும் கூட நடுத்தரமான குடும்பங்களில் பெரும்பாலும் சீலிங் ஃபேன் தான் உள்ளது. இந்த சீலிங் ஃபேன் மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் அதாவது வேகம் 2 ல் வைத்தால் கூட அதிக காற்றை கொடுக்கும். ஆனால் இந்த வெயில் காலத்தில் தான் நம்மை பழிவாங்கும் விதமாக வேகம் 5 ல் வைத்தால் கூட சிறிதளவு காற்றையே தரும்.

சீலிங் ஃபேன் இன் வேகம் குறைகிறது என்றால் அந்த பேனில் தூசி மற்றும் குப்பைகள் படிந்து இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். எனவே ஃபேன் இன் ரெக்கையில் உள்ள குப்பைகளை நாம் சுத்தம் செய்தும் வைப்போம். ஆனாலும் ஒரு சில சமயங்களில் ஃபேன் னின் வேகம் அதிகரிக்காது.

ஃபேன் ஐ சுத்தம் செய்தும் காற்றின் வேகம் அதிகரிக்கவில்லை என்றால், பேனில் உள்ள கண்டன்ஸர் என்கின்ற பொருளை மாற்றினால் கண்டிப்பாக காற்றின் வேகம் அதிகரிக்கும். பொதுவாக இந்த கண்டன்சர் 70-80 ரூபாய்க்குள் தான் வரும்.

கண்டென்ஸர் மாற்றுவது அவ்வளவு கடினம் அல்ல. அதை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். இது ஃபேனின் மோட்டருக்கு மேலே இருக்கும். பழைய கண்டென்ஸரை அகற்றும் போது அதன் ஒயர் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் கவனியுங்கள்.

சரியாக அதே வழியில் புதிய கண்டென்சரை மாற்றுங்கள் அதன் பிறகு மின்விசிறியை ஆன் செய்தால் அது சூப்பர் ஸ்பீடில் சுழலும்.
ஃபேன் ஐ அவ்வபோது சரியாக சுத்தம் செய்து, அதில் உள்ள பிரச்சனைகளையும் சரி செய்து கொண்டோம் என்றால் நீண்ட காலத்திற்கு அந்த ஃபேன் உழைக்கும்.