Israel:காசா ஹமாஸ் அமைப்பின் மீது ரசாயன ஏவுகணைகள் கொண்டு தாக்கி இருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் கடந்த ஒரு வருடங்களாக நடந்து வருகிறது. இந்த போரில் 45 ஆயிரத்திற்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகள் தான அதிகமானவர்கள். தற்போது இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. பாலஸ்தீனம் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பின் மீது தடை செய்யப்பட ஏவுகணை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர்ந்து 5000 ஏவுகணை ஏவி தாக்குதலை நடத்தியது. இதில் 200க்கு மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் பிணைக்கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டார் கள். அதற்கு எதிர் தாக்குதல் அளிக்கும் வகையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காஸாவில் மனித உடல்களை வெப்பத்தால் ஆவியாக்கும் ஏவுகனைகளை பயன்படுத்தி தாக்குதலை தொடர்ந்து இருக்கிறது.
இந்த தாக்குதலில் 2210 பேர் உடல் வெப்பத்தால் ஆவியாகி விட்டது என பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேஸ் தடை செய்யப்பட வெப்பத்தை உமிழும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதால் மனித உடல்கள் ஆவியாகி மயமாகிறது என் தெரிவித்து இருக்கிறது பாலஸ்தீன அரசு.இதனால் 1760 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மாயமாகி இருக்கிறது.
மேலும் அங்கு உள்ள கட்டிடங்கள் கூட ஆவியாகி வருவதாக காச சுகாதாரத்துறை குற்றச்சாட்டு வைத்து வருகிறது. மேலும் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறது பாலஸ்தீன அரசு.