இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் முடிவுக்கு வருமா? களத்தில் இறங்கிய அமெரிக்கா!!

Photo of author

By Sakthi

israel-hezbollah war:இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஹிஸ்புல்லா போரை நிறுத்துவதற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.

இஸ்ரேல்  பாலஸ்தீன போர் கடந்த ஒரு வருட காலமாக நீடித்து வருகிறது. மேலும் லெபனானை சேர்ந்த இந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல் ராணுவம். இந்த நிலையில் இரு நாடுகளுக்கு  இடையே போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவர்கள் கையெழுத்து பெற முயற்சித்து வருகிறது. ஆனால் சில காலமாக இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் கடுமையான போர் மோதல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல்  ராணுவத்தினர் லெபனான் தலைநகர் மத்திய பெய்ரூட் மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டு இருந்தார்கள்.

அதில் 29 பேர் கொல்லப்பட்டார்கள். இஸ்ரேல் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் 250 க்கும் மேற்பட்ட ஏவுகணை இஸ்ரேல் மீது ஏவி இருக்கிறது இதில் 250 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இரு நாடுகளும் தங்களது தொடர்ந்து போர் தாக்குதலை நடத்தி வருவதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க முடிவு செய்துள்ளது.

அதன் முதற்கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட  இரு நாடு தலைவர்களிடம் பேசி வருகிறது. அதன் தொடர்ச்சியாக போர் நிறுத்த உடன்படிக்கை க்கு முதல் கட்ட ஒப்புதலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அளித்திருந்த நிலையில் கூட இரு நாடுகளும்  போரின் தாக்குதலை குறைக்க வில்லை. போர் நிறுத்துவது   என்பதை இஸ்ரேல் தான் முடிவு செய்ய வேண்டும் என ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற  ஷேக் நைம் காசிம் தெரிவித்து இருக்கிறார்.