காசாவில் போர் புரிய மறுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினர். ஒன்றரை ஆண்டுகள் தொடர் போரில் தீர்வு எட்டப்படாததால் முடிவு.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தலையிட்டால் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் நிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் ராணுவத்தில் ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது, 1948 ஆம் ஆண்டு பாலஸ்தீன நாட்டில் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது முதல் இஸ்ரேல் பாலஸ்தீனம் என இரு நாடுகளுக்கும் இடையே வன்முறை பிரச்சினை ஏற்படத் தொடங்கியது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினை தீர்க்கப்பட முடியாத இருந்தது. இரு நாடுகளும் மாறி மாறி போர் தாக்குதலை நடத்தினார்கள். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள்.
இதில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த மக்களை பினைகைதிகளாக சிறை பிடித்தார்கள் ஹமாஸ் அமைப்பினர். இதில் 1200க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பலியானார்கள். அதன் பிறகு இஸ்ரேல் காசா பகுதியில் நேரடியாக களம் இறங்கி போர் செய்து வருகிறது. இந்த போரில் 40,000க்கு அதிகமானோர் உயிர் இழந்து இருக்கிறார்கள். 50,000 பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து போர் புரிந்து வருவதால் சோர்வடைந்து இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஒன்றரை ஆண்டு நீடித்து இருந்த இஸ்ரேல், பாலஸ்தீனம் போரில் இன்று வரை முடிவு எட்டப்படவில்லை இதனால் இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவில் போர் புரிய மறுக்கிறார்கள் என சொல்லப்பட்டு வருகிறது.
இதனால் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு லெபனானில் போர் முடிவுக்கு வர உள்ளதால் அங்கு இருக்கும் இஸ்ரேல் படை வீரர்கள் காச அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.