காலையிலேயே பரபரப்பு! பிரபல திரைப்பட பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரைய்டு!

Photo of author

By Sakthi

காலையிலேயே பரபரப்பு! பிரபல திரைப்பட பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரைய்டு!

Sakthi

திரைப்பட பைனான்சியர் அன்பு செவியனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பகுதிகளில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற அவருடைய வீட்டிற்கு இன்று காலை 5 மணியளவில் வந்த வருமானவரித் துறையைச் சார்ந்தவர்கள் அதிரடி சோதனை செய்து வருகிறார்கள். சென்னை மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அன்புச் செழியனுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகள் என ஒட்டுமொத்தமாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. நுங்கம்பாக்கம்,காம்தார் நகரில் இருக்கின்ற அன்புச்செழியனின் தம்பி அழகர்சாமி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரையைச் சார்ந்த அன்புச் செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 2020 ஆம் ஆண்டு அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரிலும், சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று இருப்பது தொடர்பாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் 20கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.