எனக்கும் சிறு வயதில் இது நடந்தது! பிள்ளைகள் சொல்வதை பெற்றோர் காது கொடுத்து கேளுங்கள்! – பிரபல நடிகை பரபரப்பு!

Photo of author

By Hasini

எனக்கும் சிறு வயதில் இது நடந்தது! பிள்ளைகள் சொல்வதை பெற்றோர் காது கொடுத்து கேளுங்கள்! – பிரபல நடிகை பரபரப்பு!

இந்தி திரையுலகில் பிரபல சீரியல் நடிகையாகவும், பரத நாட்டிய கலைஞராகவும் இருப்பவர் தேவோலீனா பட்டாச்சார்ஜி. இவர் சமீபத்தில் தனது சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறியிருந்தார். அதில் தனது சிறுவயதில் கணித சிறப்பு வகுப்பிற்கு சென்ற போது அந்த ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும், இது குறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விரும்பினேன்.

ஆனால் எனது பெற்றோர் அதை மறுத்து விட்டனர் என்றும், அதன் காரணமாக என்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறியிருந்தார். ப்லிப் கார்ட்டின் பிரபல நிகழ்ச்சியான லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் நிகழ்ச்சியில் இந்த சம்பவம் குறித்து வெளிப்படையாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் அந்த ஆசிரியர் மிகவும் சிறந்தவர் என்று அனைவரும் கூறுவார்கள். எல்லோரும் அவரிடமே டியூசனுக்கு செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் கூட அவரிடம் தான் தொடர்ந்து படிக்க சென்றனர் என்றும் கூறினார். திடீரென்று ஒரு வாரம் அவர்கள் வராது நிறுத்திவிட்டனர். அப்போது நான் மட்டும் அங்கு படிப்பதற்காக சென்றேன்.

அப்போது அந்த ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் வீட்டுக்கு திரும்பி வந்து நடந்த விஷயங்கள் குறித்து அம்மாவிடம் கூறினேன். மேலும் நாங்கள் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் நான் மிகவும் கடுமையான நடவடிக்கையை அவர் மீது எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் என் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறினார். அனைத்து பெற்றோருக்கும் இது எனது அறிவுரை என்றும் கூறியிருந்தார். நமது பிள்ளைகள் நம்மிடம் இது போன்ற துன்பங்களை கூறும் போதெல்லாம் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்றும் கூறியுள்ளார்.