லியோபடத்தின் ஷூட்டிங் முடிந்தது… சுற்றுலா புறப்பட்ட நடிகர் விஜய்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!

0
37

லியோபடத்தின் ஷூட்டிங் முடிந்தது… சுற்றுலா புறப்பட்ட நடிகர் விஜய்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…

 

லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் நடிகர் விஜய் அவர்கள் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய் நடித்துள்ள 67வது படமான லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லியோ திரைப்படத்தில் நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் மற்றும் நடித்துள்ளனர்.

 

லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத் லியோ திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டேபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் நடிகர் விஜய் அவர்கள் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய் விமானநிலையத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் நடிகர் விஜய் அவர்கள் சுற்றுலா சென்று திரும்பிய பிறகு லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

லியே திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவருடைய 68வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 68வது திரைப்படமான தளபதி68 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கவுள்ளார்.  ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.