அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் இது கட்டாயம்!! உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் மொழியை பாடமாக அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தனியார் பேட்டி ஒன்றில் அறிவித்தார்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தனது தாய்மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.தாய்மொழியான தமிழை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று மற்ற மொழிகளை விட தமிழை சிறப்பாக்கி வருகிறது. அந்த வகையில் பல்வேறு கல்லூரியில் தமிழை முதன்மை பாடமாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது அரசு.
மத்திய அரசு தமிழுக்கு எதிராக கொண்டுவரும் மும்மொழி கொள்கைகளை பல்வேறு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நமது தமிழக அரசு நமது தாய்மொழியான தமிழை மேலும் வலுசேர்க்கும் விதமாக பல்வேறு முடிவுகளை எடுத்துவருகிறது.
இதனை தொடர்ந்து நேற்று ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் பேசுகையில்,”நடப்பு கல்வி ஆண்டில் தன்னாட்சி கல்லூரிகளை அதாவது தனியார் கல்லூரிகளை தவிர அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடம் முதன்மை பாடமாக அமல்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டு முதல் அதாவது தற்போது புதிதாய் சேர இருக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடமாக அமல்படுத்தப்படும் எனவும் அதற்க்கான தீவிர பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.