TVK NTK: நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்படத்திலிருந்தே தனித்து களம் கண்டு வருகிறது. திமுகவை தனது அரசியல் எதிரியாக கருதி செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி தனது பிரச்சாரம், பொதுக்கூட்டம் என அனைத்திலும் திமுகவை வஞ்சித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால் தற்போது புதிதாக தொடங்கப்பட்ட கட்சியான தவெகவையும் அந்த வரிசையில் சேர்த்து கொண்டது. சமூக வலைதளங்கள், கட்சி கூட்டங்கள் என அனைத்திலும் விஜய்யை சரமாரியாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் நேரில் ஆறுதல் கூறும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இது குறித்து சீமான் அவர்களிடம் இன்று கோவையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பது விஜய்யின் தனிப்பட்ட விஷயம். இதில் நான் கருத்து கூற ஒன்றுமில்லை என்று கூறிய அவர், தொடர்ந்து கரூர் நிகழ்வை பற்றியே பேசி கொண்டிருப்பதை அருவெறுப்பாக நினைக்கிறேன்.
தமிழகத்தில் எவ்வளவோ வீர மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த சம்பவத்திற்கெல்லாம் அரசு பொறுப்பேற்கிறதா? ஒரு நடிகரை பார்க்க சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை, அதனை லட்சம் நிவாரணம் போன்றவற்றை வழங்குகிறார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் நான் ஒன்றும், ஏசி அறையிலிருந்து வெளியே வரவில்லை, சிறை வாசத்திலிருந்து வந்தேன் என்று கடுமையாக தனது விமர்சனத்தை முன் வைத்தார்.

