Aadhav arjuna: விசிக-வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா விஜய் தவெக-வில் இணைய உள்ளதாக தகவல்.
திமுக மற்றும் விசிக கூட்டணிக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், கட்சியின் கொள்கைகள் உடன்படாமல் செயல்பட்டு இருக்கிறார் என ஆதவ் அர்ஜூனாவை திருமாவளவன் விசிக கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்தார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா தன்னை விசிக கட்சியில் இருந்து முழுமையாக விலக்கி கொண்டார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர். திருமாவளவன் விமர்சித்து இருப்பதை ஒரு அட்வைஸாக பார்க்கிறேன் என்றும் கள அரசியலை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார். மேலும், விஜய் தவெக கட்சியில் இணைவீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் எவ்வித மறுப்பு தெரிவிக்காமல் காலம் தான் முடிவு செய்யும் என தெரிவித்து இருக்கிறார்.
விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த இவர் விஜய் ஆரம்பித்த கட்சியின் தவெக கொள்கைக்கு ஆதரவு கொடுத்தார். விஜய் நேரடியாக திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்தார். இந்த நிலையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருமா வருவதற்கு காரணம் திமுக கொடுத்த அழுத்தம் தான் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இனி பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி இருந்தார்.
ஆதவ் அர்ஜூனா, திமுகவை எதிர்த்தது காரணமாகவே விசிக பொது செயலாளர் பதிவில் இருந்து நீக்கப்பட்டார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இன் நிலையில் தான் முழுவதும் விசிக கட்சியில் இருந்து விலக்கி கொண்டு இருக்கிறார். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை ஆதரித்த இவர் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது