இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு! 

Photo of author

By Sakthi

இந்த இடைத் தேர்தலில் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான்! அதிமுக கட்சி அறிவிப்பு! 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டும் எந்தவித தடையும் இன்றி நேர்மையான முறையில் நடைபெற்றால் முதலில் டெபாசிட்டை இழப்பது திமுக கட்சி தான் என்று அதிமுக அறிவித்துள்ளது. 

வரும் ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அவர்கள் அதிமுக கட்சி இடைத் தேர்தலில் இருந்து விலகியது பற்றியும் டெபாசிட் பற்றியும்  விமர்சனம் செய்தார். இதற்கு அதிமுக கட்சியின் ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. 

அதிமுக கட்சியின் ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக கட்சிக்கும் திமுக கட்சிக்கும் இருக்கும் வாக்கு வித்தியாசத்தை பார்த்த பின்பும் அறாவாலய வாயிற்காவலர் ஆர்.எஸ் பாரதி அவர்கள் டெபாசிட் பற்றி பேசுவது நகைப்புக்குரிய விஷயம் ஆகும். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எந்தவித இடையூறும் இன்றி நேர்மையாக நடந்தால் டெபாசிட் இழப்பது திமுக கட்சிதான் என்பதை இந்த நாடு முழுவதுமே அறியும். அதை 2026ம் ஆண்டு சொல்லும். 

திருமங்கலம் முதல் ஈரோடு கிழக்கு வரை பலவிதமான பார்முலாக்களை வகுத்த திமுக கட்சியினர் வாக்குச் சாவடியை கைப்பற்றுவது பற்றி பேசுவதா? 

அன்டர்(Under) டீலிங், பேக்கரி டீலிங் போன்று டீலிங் செய்வது திமுக கட்சிக்கு வழக்கமாக இருக்கலாம். ஆனால் அதிமுக கட்சி எப்பொழுதும் நேர்மையான முறையில் செயல்பட்டு நெஞ்சுரத்துடன் மக்களை சந்திக்கும் இயக்கம்” என்று குறிப்பிட்டுள்ளது.