நிவாரண உதவிகளை வழங்க சென்ற ஸ்டாலினுக்கு திடீரென்று ஏற்பட்ட விபரீதம்!

Photo of author

By Sakthi

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கின்ற சென்னை மக்களுக்கு திமுகவின் சார்பாக நிவாரண உதவிகள் கொடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையிலே தன்னுடைய தொகுதியான கொளத்தூரில் மழை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று திமுகவின் தலைவர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். கொஞ்ச நேரம் பொருட்களை கொடுத்துக்கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென்று உடலில் சோர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக, சற்று தள்ளி சென்று பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார் ஸ்டாரின். அருகே திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் ஆகியோர் இருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அங்கே ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது இதன் காரணமாக கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது .ஆனாலும் திமுக தலைமை உடனடியாக இது முற்றிலுமாக வதந்தி என்று மறுத்துவிட்டது.

இந்தநிலையில் கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் தனக்கு லேசான மயக்கம் ஏற்பட்ட காரணத்தால், ரத்த அழுத்த பரிசோதனை செய்துகொண்டேன் மருத்துவர்கள் உடைய அறிவுரைப்படி ரத்த அழுத்தம் ஈசிஜி பரிசோதனை செய்யப்பட்டிருக்கின்றது .மற்றபடி வேறு எதுவும் கிடையாது மருத்துவர்கள் உடைய அறிவுரைப்படி சிறிது நேரம் ஓய்வு எடுத்தேன் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார்.