ரஜினி தான் என்னை அப்படி கட்டிப்பிடித்தார்!! கமல் அந்த விஷயத்தில் அப்படி இல்லை அதனால் தான் திட்டினேன்- நடிகை ஓபன் டாக்!!

Photo of author

By Sakthi

ரஜினி தான் என்னை அப்படி கட்டிப்பிடித்தார்!! கமல் அந்த விஷயத்தில் அப்படி இல்லை அதனால் தான் திட்டினேன்- நடிகை ஓபன் டாக்!!
பழம்பெரும் நடிகை சுமித்ரா அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது உலகநாயகனை திட்டியது குறித்தும் சூப்பர் ஸ்டாருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட நிகழ்வு குறித்தும் கூறியுள்ளார்.
பழம்பெரும் நடிகைகளில் குணச்சித்திர வேடங்களை ஏற்று சிறப்பாக நடித்த நடிகை சுமித்ரா அவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருடனும் நடித்துள்ளார்.
நடிகை சுமித்ரா அவர்கள் கமல்ஹாசனுடன் மோகம் முப்பது வருஷம், நிழல் நிஜமாகிறது ஆகிய திரைப்படங்களிலும் ரஜினிகாந்த் அவர்களுடன் ஜஸ்டிஸ் கோபிநாத், புவனா ஒரு கேள்விக்குறி, இறைவன் கொடுத்த வரம், ரகுபதி ராகவன் ராஜாராம் ஆகிய திரைப்படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை சுமித்ரா அவர்கள் “சிங்கார வேலன் படத்திற்கு முன்பு வரை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் என்னை சுமி சுமி என்று அழைத்தார். சிங்கார வேலன் திரைப்படத்தில் நான் அவருக்கு அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்க பொழுது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் என்னை மம்மி மம்மி என்று அழைக்க எனக்கு கோபம் வந்து விட்டது. இதனால் நான் கமலை பார்த்து உனக்கு உதை கிடைக்கும் பாத்துக்கோ அப்படினு திட்டினேன்.
அதே போல நானும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் இணைந்து பணக்காரன் திரைப்படத்தில் நடித்தோம். அதில் நான் அவருக்கு அம்மாவாக நடித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சீனில் நடிகர் ரஜினிகாந்த் என்னை பார்த்து அம்மா என்று கூறி ஓடி வந்து என்னை கட்டி பிடிக்கணும். ஆனால் அவர் பாதி தூரம் ஓடி வருவாரு. அப்புறம் அப்படியே நின்று சிரிப்பார்.
அப்போ ரஜினிகாந்த் இவங்கள என்னால அம்மா என்று கூப்பிட முடியவில்லை சாரி சார் என்று சொல்வார். அப்புறமா டேரக்டர் ஆங்கள் மாத்தி நடிக்க வச்சாரு. அதுக்கு அப்புறமா தான் நடிகர் ரஜினிகாந்த் அம்மா என்று கூப்பிட்டு கட்டி பிடிச்சாரு. ஆனா அப்பவும் பின்னாடி நின்று சிரித்தார்” என்று கூறினார்.