எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்!!

Photo of author

By Sakthi

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்!!

Sakthi

எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருக்கும்! இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகர் சித்தார்த் தகவல்!

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த நடிகர் சித்தார்த் அவர்கள் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் சங்கர் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், பாபி சிம்கா, சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இயக்குநர் சங்கர் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரண் தயாரிக்கின்றார். ராக்ஸ்டார் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த நிலையில் இந்தியன் 2 த3ரைப்படம் பற்றி நடிகர் சித்தார்த் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 திரைப்படம் பற்றி நடிகர் சித்தார்த் அவர்கள் “என் குரு கமல்ஹாசன் அவர்களுடன் சேர்ந்து நடித்ததை வாழ்நாள் வாய்ப்பாக நினைக்கின்றேன். இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும்” என கூறியுள்ளார்.