தமிழகத்தில் ஜூன் 22ம் தேதி வரை மழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வரும் ஜூன் 22ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை காலம் முடிந்து கோடையின் வெப்பம் தனியத் தொடங்கியுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தெடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகின்றது.
அந்த வகையில் தென்மேற்கு பகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள தமிழகத்தின் பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் “தமிழகத்தில் தற்பொழுது வளிமண்டல சுழற்சி நிலவி வருகின்றது. இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் நாளை(ஜூன்18) முதல் ஜூன் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். ஒரு புறம் மழை பெய்தாலும் இன்னும் ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.