எல்லை காவல் படையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! தகுதி உடையவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

டிரஷர் வெடினரி காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ திபெத்திய எல்லை காவல் படை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் – 40

சம்பளம்– 25,500to 8110

குரூப் சி அரசிதழ் பதிவுறா அலுவலர் பதவி முதலில் தற்காலிகமாக நியமிக்கப்படும். அதன் பிறகு நிரந்தரம் செய்யப்படும். இந்த பதவிக்கு இந்திய குடிமக்கள் நேபாளம் மற்றும் பூடான் உட்பட அனைவரும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான நாட்கள்– இணையதள விண்ணப்ப செயல்முறை வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 17ஆம் தேதி வரையில் செயல்பாட்டில் இருக்கும்.

கல்வித் தகுதி – பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கால்நடை தொடர்பான பாட நெறிகளில் பட்டம் மற்றும் சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

வயது- விண்ணப்பிக்க விருப்பம் கொள்பவர்கள் வயது நவம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று 25க்கு கீழும் 18 வயதிற்கு மேலும் இருக்க வேண்டும் இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. விண்ணப்பங்கள் அனைத்தும் www.recruitment.it police.nic.in இணையதளம் மூலமாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் ஆஃப்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Leave a Comment