
TVK: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் போன்றோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து இவர்கள் மூவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நிர்மல் குமார் மற்றும் புஸ்ஸு ஆனந்த்க்கு சம்மன் அனுப்பட்டது. இதனை நிர்மல் குமார் மறுத்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று விஜய் தலைமையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில் சட்டமன்ற தேர்தலுக்காக 28 பேர் கொண்ட நிர்வாக குழுவை விஜய் அமைத்துள்ளார். மேலும் இந்த குழுவிற்கு நான் தான் தலைமை தாங்குவேன் என்று விஜய் கூறயிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் வெளியிட்ட அறிக்கைகளிலெல்லாம் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்குவார் என்று கூறப்பட்ட நிலையில், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணம் என்னவென்று ஆராயும் போது தான் கரூர் சம்பவத்தால் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக இருந்தது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரியவந்தது.
துயர சம்பவத்தின் போது தலைவருடன் இருந்து ஆலோசனை கூற வேண்டிய நபரே தலைமறைவானதால் விஜய்க்கு ஆனந்த் மேல் இருந்த நம்பிக்கை குறைந்து வருவதாகவும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் கரூர் சம்பவத்தை விட இவர்கள் தலைமறைவானதை பற்றி தான் அனைத்து ஊடகங்களும் பேசி வந்தது விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் மேலிருந்த ஆத்திரத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக தவெகவிலிருந்து புஸ்ஸி ஆனந்த ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
