அங்கிருந்து வெளியேறி விட்டால் பரவாயில்லை! கோரிக்கை விடுத்த இந்தியா!

Photo of author

By Hasini

அங்கிருந்து வெளியேறி விட்டால் பரவாயில்லை! கோரிக்கை விடுத்த இந்தியா!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அங்கே அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள், இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். அதனை தொடர்ந்து மாகாணங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டும் வருகின்றனர்.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் நான்காவது பெரிய நகரமான மசார் இ ஷரிப் நகரை  கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நான்காவது பெரிய நகரமான மசார் இ ஷரிப்பிலிருந்து சிறப்பு விமானம் மூலம் அங்கிருந்து இந்தியர்கள் வெளியேறவும்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தலீபான்கள் ஆப்கான்களின் தலைவர்களையும் கொன்று வருகின்றனர். மேலும் கடந்த வாரத்தில் ஒரு பெண் இறுக்கமான உடை அணிந்து அவர்களது பாரம்பரிய  மேலாடையை அணியவில்லை என்பதற்காக சுட்டு கொன்றதும் குறிப்பிடத் தக்கது. மேலும் இவர்கள் சிறந்த புகைப்பட கலைஞரான தனிஷ்க் சித்திக் என்பவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அவருக்கு உதவி புரிந்த ஆப்கான் படையினரையும் கொடூரமாக கொன்று குவித்துள்ளனர். எனவே இந்திய மக்களின் நலன் கருதி இந்தியர்கள் வெளியேற கோரிக்கை வைத்துள்ளது.