வருகின்றது ஜெயிலர் 2! நடிகர் கொடுத்த அப்டேட்! அக்டோபர் மாதம் ஸ்டார்ட்! 

Photo of author

By Sakthi

வருகின்றது ஜெயிலர் 2! நடிகர் கொடுத்த அப்டேட்! அக்டோபர் மாதம் ஸ்டார்ட்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வரவுள்ளதாக இயக்குநரும் நடிகருமான பதம் குமார் அவர்கள் அப்டேட் கொடுத்துள்ளார்.
பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களும் அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் இணைந்த திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதாவது மலையாளத்தில் இருந்து நடிகர் மோகன்லால் அவர்களும், கன்னட சினிமாவில் இருந்து நடிகர் சிவராஜ் குமார் அவர்களும், ஹிந்தியில் இருந்து நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் அவர்களும், தெலுங்கில் நடிகர் சுனில் அவர்களும் நடித்திருந்தனர்.
அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து ரிலீஸ் செய்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் 500 கோடியை தாண்டியது. இதையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் பற்றி அங்கங்கு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என்று பன்முகம் கொண்ட இயக்குநர் பதம் குமார் அவர்கள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் இயக்குநர் பதம் குமார் அவர்கள் ஜெயிலர் 2 திரைப்படம் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார்.
தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த இயக்குநர் பதம் குமார் அவர்கள் அனைவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதையடுத்து ஜெயிலர் 2  குறித்து இயக்குநர் பதம் குமார் அவர்கள் “நான் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தேன். அந்த படம் தமிழ் மக்கள் அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து நான் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் தயாரித்து நடிகர் கவின் நடித்து வரும் பிளடி பெக்கர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன்.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படம் வரவுள்ளது. ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது. மேலும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றேன்” என்று அவர் கூறினார். இதனால் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாவது உறுதியாகி இருக்கின்றது.