ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!

Photo of author

By Sakthi

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!

Sakthi

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!
ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை ஜெயிதர் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை தமன்னா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜேக்கி ஷெரூப், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியித் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ராக்ஸ்டார் அனிருத் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார்.
ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகின்றது.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டப்பிங் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் நடிகை தமன்னா அவர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஜெயிலர் திரைப்படத்தின் அப்டேடை பகிர்ந்துள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னாவின் அறிமுகப் பாடல் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. அந்த அறிமுகப் பாடலுக்கான ஒத்திகை தற்போது நடைபெற்று வருவதாக நடிகை தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக அறிவித்துள்ளார்.