இந்தியாவில் சுமார் 19 கோடி குடும்பங்கள் உள்ளன.இவற்றில் 24 சதவீதத்தினருக்கு மட்டுமே வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மற்றும் அனைவருக்கும் போதுமான குடிநீர் வழங்குவதை இலக்காகக் கொண்டு 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு ஜல் ஜீவன் இயக்கத்தைத் துவக்க உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு, நீரை சேமிப்பது,வீடுகளில் பயன்படுத்திய நீரை சுத்திகரிப்பு செய்து திரும்பவும் பயன்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களும் செயல்படுத்தப்பட்ட இருக்கின்றன.
மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் இணைந்து சுமார் 14 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதே ஜல் ஜீவன் இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
மத்திய அரசு,மணிப்பூர் மாநிலத்திற்கு 1,185 குடியிருப்புகளில் உள்ள 1,42,749 வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகளை அளிப்பதற்காக நிதியுதவி அளித்துள்ளது.இந்தத் திட்டம், 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற இலக்கை அடைய மணிப்பூர் அரசுக்கு உதவும். புதிய வளர்ச்சி வங்கி அளித்துள்ள கடன் உதவியுடன், ரூ.3054.58 கோடி செலவில் இது செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் நாளை காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.இந்த நிகழ்வில் மணிப்பூர் மாநில ஆளுநர், முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இம்பாலில் இருந்து கலந்து கொள்கின்றனர்.