தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!

0
184
#image_title
தீபாவளிக்கு வெயாகும்  படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!
நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2023ம் ஆண்டுக்கான தீபாவளி நாளன்று தமிழ் படங்கள் வெளியாவதில் போட்டி நிலவி வருகின்றது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும், நடிகர் எஸ்.ஜே சூரியா, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும்  ஜப்பான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது.
நடிகர் கார்த்தி நடிக்கும் 25வது படமாக உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தை இயக்குனர் ராஜு மோகன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை அனு இம்மானுவேல், நடிகர் சுனில் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார்.
இன்று நடிகர் கார்த்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் கார்த்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டருடன் ஜப்பான் திரைப்படத்தின் வெளியீட்டை பற்றி படக்குழு தெரிவித்துள்ளது.