விண்வெளி சுற்றுலாக்கு உதவியாளரை அழைத்து சென்ற ஜப்பானின் மிக பெரிய கோடீஸ்வரன்!
ஜப்பானில் உள்ள மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவர் தற்போது விண்வெளிப்பயணம் செய்ய உள்ளார். அதுவும் 12 நாட்கள் என்று இந்த சுற்றுலாவிற்கு அவர் திட்டம் வகுத்துள்ளார். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர் அதுவும் 17 கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர் என்றும் சொல்லப்படுகிறது. 44 வயதான யுசாகு மேசாவா என்பவர்தான்.
அவர் நமது இந்தியாவில் உள்ள பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் ரீடைல் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஜப்பானைப் பொறுத்தவரை மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் என்றால் அது இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல பல பவுண்டேஷன்கள் மற்றும் கலைப் பொருட்கள் சேமிப்பு மையம் போன்றவற்றையும் இவர் நடத்தி வருகிறார்.
இவர் வரும் காலத்தில் 2023 ம் வருடம் ஸ்பேஸ் X நிறுவனத்தின் மூலம் பிக் பால்கான் ஹெவி என்ற ராக்கெட் மூலம் நிலவுக்குச் செல்ல இருப்பதாகவும், ஏற்கனவே அறிவிப்புகள் வெளிவந்த நிலையில், அவர் தற்போது ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸாண்டர் உடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். நேற்று அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்து விட்டார்.
மேலும் இவர் தன்னுடைய விண்வெளி பயணத்தை எல்லாம் படம் பிடிப்பதற்காக தனது உதவியாளர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அதன் காரணமாக அவர்கள் 3 பேரும் விண்வெளிக்கு சோயூஸ் எம் 20 என்ற ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர்.