மேட்ச் வின்னருக்கு ரெஸ்ட் கொடுத்த பிசிசிஐ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ப்ராவிற்கு 2வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பும்ப்ராவிற்கு 2வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

எதிர்வரும் 24ஆம் தேதி ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டியிலும் அதற்கடுத்த கடைசி டெஸ்ட் போட்டியிலும் விளையாடும் பும்ப்ராவிற்கு அதன் பிறகு நடைபெறும் ஐந்து டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ஆரம்பித்து இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி வரை சுமார் 180 அவர்கள் பந்துவீசி இருக்கின்ற பும்ரா, கடைசி 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட இருக்கிறார். அவர் பந்துவீசிய ஓவர் எண்ணிக்கை களத்தில் நின்ற நேரம் போன்றவற்றை கணக்கில் வைத்து அதோடு அவருடைய உடல் தகுதியும் கருத்தில் வைத்துக் கொண்டு அவருக்கு டி20 மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு அளிக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டியின்போது அவர் காயமடைந்த பிறகு கிரிக்கெட் பக்கமே வராத புவனேஸ்வர்குமார், காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கின்ற முகமது சாமி, நடராஜன், சைனி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.