எம்.ஜி.ஆரை விமர்சித்த சீமான்! ஜெயக்குமார் கேட்ட அந்தக் கேள்வி!

0
156

எம்ஜிஆர் எப்பொழுது நல்லாட்சியை கொடுத்தார் என்று சீமான் விமர்சனம் செய்ததற்கு அதிமுக தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் எம்ஜிஆரின் வாரிசு என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து வந்தார். அதேபோல எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை நான் கொடுப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எம்ஜிஆரை வைத்து பிரச்சாரம் செய்தால் அது அதிமுகவுக்கு தான் சாதகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அதோடு, பிரபாகரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும், ஈழத்தின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தாலும், எம்.ஜி.ஆர் மீது எனக்கு மரியாதை இருக்கின்றது. மற்றபடி அவர் எவ்வாறு சிறந்த ஆட்சியை கொடுத்தார். என்று கேள்வி எழுப்பிய சீமான், தமிழ்வழிக் கல்வியை ஆங்கில வழிக் கல்வியாக மாற்றியது எம்.ஜி.ஆர் தான் கல்வி மருத்துவத்தை தனியாருக்கு தாரை வார்த்தது எம்.ஜி.ஆர் தான் என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

அவருடைய இந்தக் குற்றச்சாட்டிற்கு பதில் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆரின் புகழை யாராலும் அழித்துவிட இயலாது. எம்ஜிஆர் என்ன செய்தார் என்பது தொடர்பாக சீமானுக்கு தேவைப்பட்டால், புத்தகமாகவே கொடுக்கின்றேன். உண்மை நிலவரம் தெரியாமல் திசை திருப்பும் வகையில் பேசியிருப்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. எம்.ஜி.ஆர் மீது மண்ணை வாரி தூற்றுவதற்கு நினைத்தால் அது அவர்களுக்குத்தான் இழிவாக முடியும் என்று பதில் தெரிவித்து இருக்கின்றார்.

அதோடு அவர் யாருக்கு இரண்டாவது அணியாக வேலை பார்க்கின்றார், என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், சீமான் அவர்களுக்கு அதிமுக மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. ஒருவேளை அவரது கட்சியை சார்ந்த கல்யாணசுந்தரம் எங்களுடைய கட்சியில் இணைந்து விட்டார். என்ற கோபத்தில் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கின்றாரா என்ற சிந்தனையும் ஏற்படுகின்றது என்று தெரிவித்தார்.

Previous articleஉதயநிதி ஸ்டாலினின் வரம்புமீறி பேச்சு! கடிவாளம் போட்ட அதிமுக!
Next articleசீமானின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!