7 பேர் விடுதலை சம்பந்தமாக பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என்றும் தமிழக அரசு ஆளுநருக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் இந்த நிலையில் அவர் விரைவாக நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் முதல் அவருடைய கடுமையான முயற்சி காரணமாக தமிழகம் முன்னேறிக் கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார்.
நாட்டிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது, விவசாய பொருட்களை அதிகமாக கொள்முதல் செய்தல், மற்றும் விற்பனை செய்தல் , சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலமாக இந்தியாவிலேயே தமிழகத்தை தான் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அவ்வாறு முதல்வரின் நிர்வாகம் இருக்கின்றது. அதேபோல மழை நீர் கடலில் கலப்பதை தடுத்து மக்களுக்கு பயன்படும் வகையிலே சிறப்பான நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தேர்ச்சி பெற்று இருக்கின்றது என்று தெரிவித்தார் அமைச்சர்.
எதிர்வரும் சட்டசபை தேர்தலில் இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், அதன் காரணமாக கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகும்.
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமெரிக்காவின் துணை அதிபராக, தேர்வு செய்யப்பட்டு இருக்கின்ற கமலா ஹாரிஸ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஏழு தமிழர்கள் விடுதலை சம்பந்தமாக பேசுவதற்கு திமுகவிற்கு எந்த ஒரு அருகதையும் கிடையாது என்றார்,அதே சமயம் தமிழக அரசு தொடர்ச்சியாக ஆளுநருக்கு அழுத்தம் தந்து வரும் நிலையில் அவர் விரைவில் நல்ல ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.