ADMK BJP: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக-பாஜக கூட்டணி உருவனதிலிருந்தே அதிமுகவின் அனைத்து கூட்டங்களிலிருந்தும் விலகியே இருந்தார். மேலும் 2020 சட்டமன்ற தேர்தலில் ஜெயக்குமார் தோல்வியடைந்ததற்கு பாஜக உடனான கூட்டணி தான் காரணம் என்று கூறியிருந்தார். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் இவர் வேறு கட்சியுடன் கூட்டணி அமைப்பார், இல்லையென்றால் தனித்து செயல்படுவார் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஒன்றிய அரசின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்திலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல் 100 % சரியாக இருக்கிறதா என்று கேட்டால், இல்லையென்றே சொல்ல வேண்டும்.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதால், தீவிர வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது அவசியம் என்று கூறியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம் என்று கூறினார். இதற்கு முன் பாஜகவை கடுமையாக வஞ்சித்து ஜெயக்குமார் தற்போது ஒன்றிய அரசான பாஜக மேற்கொள்ளும் திட்டத்தை வரவேற்பது அவர், பாஜகவுடன் இணக்கமாக சென்று விட்டார் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

