ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து பஞ்சாயத்து!! ஒற்றை பதிவால் அம்பலமான உண்மை!!                        

0
197
Jayam Ravi and Arthi Divorce Panchayat!! The truth exposed by a single post!!
Jayam Ravi and Arthi Divorce Panchayat!! The truth exposed by a single post!!

 

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து பஞ்சாயத்து!! ஒற்றை பதிவால் அம்பலமான உண்மை!!

சமீப காலமாக திரை துறையில் இருக்கும் முன்னணி நடிகர்,நடிகைகள் விவாகரத்து பெறுவது வாடிக்கையாகி விட்டது.சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யாவை தொடர்ந்து சமீபத்தில் கூட ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்கள்.அந்த வகையில் திரை குடும்பத்தில் பிறந்து பல ஹிட் படங்களை கொடுத்து தொடர்ந்து நடித்து வரும் ஜெயம் ரவி அவர்கள் தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிய போவதாக சமூக ஊடகங்ககளில் செய்தி பரவி வருகிறது.

இது தொடர்பாக கணவன்-மனைவி இருவரது தரப்பிலும் எவ்விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், ரசிகர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது.மணிரத்னத்தின் இயக்கத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் அடித்தது.ஆனாலும் ரவி அவரது மாமியாரின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை என்றும்,இதனால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் கூட சமீபத்தில் ஜெயம் ரவி திரையுலகிற்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் ஆர்த்தி அவர்கள் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இதனை ரசிகர்கள் மகிழ்ச்சியாக ரசித்து கொண்டு இருந்தவேளையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.அதாவது ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் ஜெயம் ரவியுடனான புகைப்படங்களை நீக்கியுள்ளார்.இதன் மூலம் இவர்கள் பிரிவது உறுதி என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.இதனால் ரசிகர்களும் கலக்கம் அடைந்து உள்ளனர்.மேலும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்,அவர்களுக்காவது
இருவரும் இணணய வேண்டும் என பலரும் எதிர்ப்பார்க்கின்றனர்.