கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி! உண்மை நிலவரத்தை போட்டுடைத்த அமைச்சர்!

Photo of author

By Sakthi

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி! உண்மை நிலவரத்தை போட்டுடைத்த அமைச்சர்!

Sakthi

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழே நகை கடன் வாங்கியவர்களின் தங்க நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 40 கிராமுக்குட்பட்ட நகைகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் நகை கடன் தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில், 1,34,233 பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்கள் என்றும், 35,37,693 பேர் தகுதியற்றவர்கள் என்றும், அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாதவர்களின் தங்க நகைகள் ஏலம் விடப்படும் என்று அறிவித்ததாக பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் போலியான செய்தி பரவியது.

இதனை தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் இருக்கின்ற கூட்டுறவு வங்கிகள் இதுதொடர்பாக அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்தனர், ஆனாலும் தகுதியற்றவர்கள் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.