மருத்துவ படிப்பு முடித்தவரா நீங்கள்!! அதிரடியான வேலை வாய்ப்பை அறிவித்தது ஜிப்மர் !!

Photo of author

By Sakthi

JIPMER :ஜிப்மர் ஆணையம் ரூ.33,040 சம்பளத்தில் வேலை வாய்ப்பினை அறிவித்து இருக்கிறது.

JIPMER ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி நிலையம் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது புது சேரியில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.  இந்த அறிவிப்பில் Project Technical Support-III, Project Nurse-II பணிக்கான காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.  மேலும் கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s in Medical social work / ANM / GNM / BSC / ICU nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்ச வயதானது 30, 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊதியத்தை பொறுத்தவரையில்  தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.33,040/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

தகுதியான விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் விண்ணப்பப் படிவத்தை  பூர்த்தி செய்து  [email protected]  எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் விண்ணப்பிக்க 19.11.2024 ம் தேதி கடைசி நாளாக அறிவித்துள்ளது ஜிப்மர் ஆணையம். மேலும் மருத்துவ படிப்பு முடித்தவர்கள இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்.