மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இனி ஈஸியா செய்யலாம் வீட்டில்..!

Photo of author

By Priya

Jigarthanda Recipe: இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ வகையான பானகங்கள் வந்தாலும், நமது மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா என்றால் நாவில் எச்சி ஊறும். மதுரை செல்பவர்கள் கட்டாயம் இந்த ஜிகர்தண்டா குடிக்காமல் இருக்க மாட்டார்கள். மதுரைக்கு எத்தனையோ ஸ்பெஷல் இருந்தாலும், அதில் ஒன்று தான் ஜிகர்தண்டா.

மதுரை ஸ்டைல் ஜிகர்தண்டா

மதுரை ஸ்டைல் ஜிகர்தண்டா வீட்டிலே செய்வது மிகவும் சுலபம். ஒருமுறை செய்து குடுத்தால் போதும். அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள் அந்த அளவிற்கு இருக்கும் இந்த மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா. நாம் இந்த பதில் மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா (Madurai Special Jigarthanda Seivathu Eppadi) செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பால் – 1 லிட்டர்
  • சர்க்கரை – 1 கப்
  • பாதாம் பிசின்- 2 அல்லது 3
  • ஐஸ் கிரீம்- 3 ஸ்பூன்
  • நன்னாரி சர்பத்- 2 ஸ்பூன்

செய்முறை

  • முதலில் ஜிகர்தண்டா செய்வதற்கு பாதம் பிசினை 2 அல்லது 3 எடுத்து அதனை முதல் இரவு தண்ணீர் சேர்த்து நன்றாக ஊறவைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் காலை பாதம் பிசின் ஊறி மேலே வந்திருக்கும்.
  • பிறகு சர்க்கரையில் கேரமல் செய்ய வேண்டும். அதற்கு எடுத்து வைத்துள்ள 1 கப் சர்க்கரையில், பாதி 1/2 கப் சர்க்கரையை ஒரு பாத்திரல் போட்டு காய்ச்சி கேரமல் பதத்திற்கு வந்ததும் அதில் சிறிதளவு வெந்நீர் சேர்த்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு ஜிகர்தண்டா செய்வதற்கு பால்கோவா தயார் செய்ய வேண்டும். அதற்கு அடுப்பை பற்ற வைத்து அதன் பின் கடாய் வைத்து எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் பாலில் பாதி அளவு, அதாவது 1/2 லிட்டர் பாலை நன்கு பால்கோவா பதம் வரை சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு மீதி உள்ள பாலை வேறு கடாயில் காய்ச்ச வேண்டும். பால் கொதி வந்ததும் அதில் மீதி உள்ள சர்க்கரையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் கொதிக்கும் பாலில் செய்து வைத்துள்ள கேரமல் பாதியை சேர்க்க வேண்டும். பிறகு பாலை இறக்கி வைத்து ஆற விடவும்.
  • பிறகு மீதி உள்ள கேரமலை எடுத்து வைத்துள்ள ஐஸ்கீரிமில் சேர்த்து கலந்து அதனை பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். ஜிகர்தண்டாவிற்கு தேவையானவற்றை தயார் செய்துவிட்டோம். இப்போது ஒரு கிளாஸ் எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்துள்ள பாதம் பிசின் சேர்க்க வேண்டும். பிறகு அதில் நன்னாரி சர்பத் அதன் மேல் பால்கோவா பிறகு காய்ச்சி வைத்துள்ள பால் ஊற்ற வேண்டும். அதன் மேல் ஜஸ்கீம் வைத்தால் சுவையான மதுரை ஸ்பெஷல் (How to Make Madurai Special Jigarthanda In Tamil) ஜிகர்தண்டா தயார்.

மேலும் படிக்க: Nimbu Juice Recipe in Tamil: இந்த வெயிலுக்கு ஈஸியான முறையில் நிம்பு சர்பத் செய்வது எப்படி?