மூன்று மாதம் இலவச ரீசார்ஜ்! விளக்கம் அளித்த ஜியோ!

0
455

மூன்று மாதம் இலவச ரீசார்ஜ்! விளக்கம் அளித்த ஜியோ!

ஜியோ நிறுவனம் மூன்று மாதம் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்பொழுது ஜியோ நிறுவனம் இந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது.

முகேஷ் அம்பானி அவர்களின் மகன் திருமணம் சமீபத்தில் மிகப் பிரம்மாணடமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்திற்கு WWE ரெஸ்ட்லிங் வீரர் ஜான் சினா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மகேந்திர சிங் தோனி, சச்சின் தெண்டுல்கர், ரோஹித் சர்மா, சல்மான் கான், சூர்யா மற்றும் ஜோதிகா என பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமணம் சுமார் 37000 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாணடமாக நடைபெற்றது. மேலும் இந்த திருமணத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள கை கடிகாரமும் வழங்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் மூன்று மாதம் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக தகவல்கள் பரவி வருகின்றது. இதற்கு ஜியோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஜியோ நிறுவனம் முகேஷ் அம்பானி அவர்களின் நிறுவனம் ஆகும். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த முகேஷ் அம்பானி அவர்களின் மகன் திருமணத்திற்கு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதம் ரீசார்ஜ் இலவசமாக வழங்கப்படுகின்றது என்று சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

இதற்கு விளக்கம் அளித்த ஜியோ நிறுவனம் “தற்பொழுது வாடிக்கையாளர்களுக்கு எந்தவித இலவச ரீசார்ஜ் திட்டமும் வழங்கப்படவில்லை. இந்த தகவல் முற்றிலும் தவறான தகவல் ஆகும். இது போன்ற போலியான தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். போலியான லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.