பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ! மூன்று மாதங்களில் இத்தனை பேரை இழந்துள்ளதா.
பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு ஜியோ நிறுவனம் மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜியோ சினிமாவின் மூலமாக இலவசமாக கிரிக்கெட் பார்க்கலாம் என்று வசதியை கொண்டு வந்து பிரபல ஓடிடி நிறுவனமான ஹாட்ஸ்டாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது ஜியோ நிறுவனம்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் இன்று வரை ரசிகர்களின் ஆதரவுடன் நடந்து கொண்டிருக்கின்றது. முன்பு எல்லாம் ஐபிஎல் போட்டியை ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் சந்தாதாரராக இணைந்தால் மட்டுமே பார்க்க முடியும். அதாவது 399 ரூபாய்க்கு செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த வருட ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா செயலியில் இலவசமாகவே காணலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு இது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்றே கூறலாம்.
ஜியோ நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம் என்று ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பு அறிவித்தது. இதையடுத்து அதிக அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் ஜியோ சினிமா ஆப் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் கிரிக்கெட்டை பார்த்து வருகின்றனர். ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மட்டுமே 46 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.