ஜே ஜே பட பாணியில் ரூபாய் நோட்டில் காதலனுக்கு லெட்டர் எழுதிய இளம்பெண்!

Photo of author

By Sakthi

ஜே ஜே பட பாணியில் ரூபாய் நோட்டில் காதலனுக்கு லெட்டர் எழுதிய இளம்பெண்!

Sakthi

Updated on:

மாதவன் கதாநாயகனாக நடித்திருந்த ஜேஜே திரைப்படத்தில் 50 ரூபாய் நோட்டில் நாயகி எழுதிக்கொடுத்த முகவரியை தேடி அலையும் காட்சிகள் இன்றளவும் தமிழ் ரசிகர்களின் மனதிலிருந்து நீங்கியிருப்பதற்கான வாய்ப்பில்லை.

அதே போன்று ஒரு சம்பவம் தற்சமயம் நடந்திருக்கிறது. அதனடிப்படையில், விபுல் என்ற வலைதள பயனாளியின் பதிவுதான் தற்போது நெட்டிசன்கள் இடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது அந்த பதிவில் 10 ரூபாய் நோட்டில் விஷால் வருகின்ற ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி எனக்கு திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது தயவுசெய்து எப்படியாவது என்னை உன்னுடன் அழைத்துச் சென்று விடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஐ லவ் யூ உன்னுடைய குசும் என்று எழுதி தன்னுடைய காதலனுக்காக பெண் ஒருவர் இவ்வாறு எழுதியிருக்கிறார். இதுகுறித்து டிவிட்டர் பதிவை இணையவாசிகள் ரீட்வீட் செய்து வருகிறார்கள். அந்த ஜோடி மிக விரைவில் ஒன்றிணைய வேண்டுமென அவரவர் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.