யூனியன் வங்கியில் வேலை!! சம்பளம் ரூ.85,920 வரை!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Jeevitha

யூனியன் வங்கியில் வேலை!! சம்பளம் ரூ.85,920 வரை!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Jeevitha

Job in Union Bank!! Salary up to Rs.85,920!! Don't miss it!!

Job Vacancy: மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனியன் வங்கியில் 1,500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யூனியன் வங்கிகளில் தற்போது காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் வங்கி அலுவலர் பணியிடங்களுக்கு சுமார் 1,500 காலியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 200 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யும் முறை என்பது முதலில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற இரண்டு முறைகள் உள்ளன.

அதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் விண்ணப்பித்த மாநிலத்தின் அலுவல் மொழியில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் பணிக்கான வயது 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பம் வருகிற 13  ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் அரசின் விதிகளின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபோர் https://www.unionbankofindia.co.in/ என்ற இனியதில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் ரூ.850 வசூலிக்கப்படும். Sc மற்றும் ST  பிரிவினருக்கு ரூ.175 செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.